December 19, 2017
தண்டோரா குழு
கன்னியாகுமரி மாவட்ட விருந்தினர் மாளிகையில் ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார்.
இதையடுத்து, குமரி அரசினர் மாளிகையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் ஆலோசனை நடித்தி வருகிறார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு பங்கேறுள்ளனர்.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 8 மீனவ குடும்பங்களும் கலந்து கொண்டுள்ளன.