• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நட்ஸ் கேக்

December 19, 2017 tamil.webdunia.com

தேவையானப் பொருட்கள்:

மைதா – 250 கிராம்
வெண்ணெய் – 200 கிராம்
எண்ணெய் – 50 மி.லி.
முட்டை – 6
சர்க்கரை – 250 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
ரம் எசென்ஸ் – 1 டீஸ்பூன்
கேரமல் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
பட்டைத்தூள் – 1/4 டீஸ்பூன்
துருவிய ஆரஞ்சு தோல் – 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன்
செர்ரி – 50 கிராம்
டூட்டி ஃப்ரூட்டி – 50 கிராம்.

வறுக்க தேவையான பொருட்கள்:

காய்ந்த திராட்சை – 50 கிராம்
பாதாம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
பிஸ்தா – 50 கிராம்
வால்நட்ஸ் – 50 கிராம்

செய்முறை:

கடாயில் வறுக்க கொடுத்த பொருட்களை, 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து வறுத்து ஆறவைக்கவும். முட்டையையும், சர்க்கரையையும் மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.

ஓர் அகலமான பாத்திரத்தில் வெண்ணெயை கைகளால் நன்கு தேய்க்கவும். இத்துடன் பேக்கிங் பவுடர், மைதா, எண்ணெய் சேர்த்து கலந்து, நடுவில் குழி செய்து (முட்டை + சர்க்கரை) கலவையை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்கு கலக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள், இஞ்சி, ஆரஞ்சு தோல், கேரமல், எசென்ஸ், பொடி வகைகள், நட்ஸ், செர்ரி, டூட்டி ஃப்ரூட்டியை கொட்டி கலந்து, வெண்ணெய் தடவிய கேக் டின்னில் ஊற்றி, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில், 4045 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். ஆறியதும் பரிமாறவும்.

மேலும் படிக்க