December 19, 2017
தண்டோரா குழு
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இன்றுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
சென்னை ஆர்கே நகரில் வரும்21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.
இதனையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று அணைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.