December 18, 2017
தண்டோரா குழு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகனேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.இதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுகவுக்கும் – டிடிவி. தினகரனுக்கும் இடையேதான் நேரடியான போட்டி இருப்பதாக பாஜகவின் செயற்பாட்டாளர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். எனவே, தமிழர்கள் டிடிவி.தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.