சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகனேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.
இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில் ஆர்.கே. நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. எனினும் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதை தடுக்க தேர்தல் ஆணையமும் பாதுகாப்பையும் சோதனையும் தீவிரப்படுத்தியுள்ளது.ஆனாலும், தேர்தல் அதிகாரிகளின் கண்களில் சிக்காமால் ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்து தான் வருகிறது. இன்று மட்டும் பல்வேறு இடங்களில் தேர்தல் அதிகாரிகள் பணப்பட்டுவாடா நடப்பதை கண்டுபித்துள்ளனர்.
தண்டையார்ப்பேட்டையில், ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் பணம் விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திமுகவினர் அவரை சுற்றிவளைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து சென்றனர். குடிசை மாற்றுவாரியத்தில் பணம் கொடுப்பதாக, கிடைத்த தகவலை தொடர்ந்து ஒரு வீட்டிற்கு சென்ற போது, அவர் வீட்டிற்குள் சென்று பூட்டு போட்டு கொண்டார். போலீசார் வந்து அந்த நபரை பிடித்து சென்றனர். ஆனால், பணத்தை பறிமுதல் செய்யாமல் ஆளை மட்டும் பிடித்து செல்வதாக கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 ஆயிரம் ரூபாய் கட்டுகளை விநியோகம் செய்த அதிமுகவினரிடம் திமுகவினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், சென்னை எழும்பூரில் உள்ள முன்னாள் எம்பி. பாலகங்கா அடையாள அட்டையுடன் 300க்கும் மேற்பட்டோர் தலா ரூ. 6000 பணம் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.கடந்த முறை பணப்பாட்டுவாடா காரணமாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யபட்ட நிலையில் தற்போதும் பணப்பாட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்