December 16, 2017
தண்டோரா குழு
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் 13 லட்சம் பணத்தை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்தனர்.
சென்னை ஆர்.கே.,நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் அத்தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப் பேட்டையில் உள்ள பிசியோதெரபி சென்டரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 13 லட்சம் ரூபாயும் அதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக வாக்காளர்கள் பெயர் பட்டியலுடன் கூடிய பூத் ஸ்லிப்களையும் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறையினர் கைபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.