• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

26ம் தேதி முதல் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

December 14, 2017 தண்டோரா குழு

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளார்.

8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் கடந்த மே மாதம் 15ம் தேதி முதல் நாள்தோறும் 3 மாவட்ட ரசிகர்கள் வீதம் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொடக்க விழாவில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தான் வரமாட்டேன் என்று நினைப்பவர்கள் ஏமாந்தூ போவார்கள் என்றும் இறுதி நாள் உரையின் போது போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் தயாராக இருங்கள் என்றும் கூறினார்.
மேலும் தொடர்ந்து விடுபட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வு திட்டமிடப்படும் என்றார்.

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைபடம் எடுக்கவுள்ளார். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சந்திப்பு நடைபெறுகிறது.

மேலும் படிக்க