• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் புல்லட் ரயிலில் ஆபத்தான விரிசல் மற்றும் எண்ணெய் கசிவு கண்டுபிடிப்பு

December 14, 2017 தண்டோரா குழு

ஜப்பான் நாட்டின் புல்லட் ரயிலில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், ரயில் தடம் புரண்டு உயிர்சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது.

தெற்கு ஜப்பானில் உள்ள ஒரு ரயில்நிலையத்திலிருந்து சுமார் 1,௦௦௦ பயணிகளுடன், “ஷின்கன்ஸன்” புல்லட் ரயில் வெளியேறியபோது, அந்த ரயிலிருந்து வித்தியாசமான சத்தத்தையும், எரியும் வாசனையும் அந்த ரயிலில் பணிபுரிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் உணர்ந்துள்ளனர். இதனால் அது குறித்து ரயில் ஓட்டுநருக்கு தகவல் அளித்தனர்.உடனே மத்திய ஜப்பானில் உள்ள நகோயா ரயில்நிலையத்திற்கு வந்தபோது, அந்த ரயில்நிலையத்தின் பொறியாளர்கள் ரயிலை சோதனை செய்தனர். அப்போது அந்த ரயிலின் அடிப்பாகத்தில் விரிசல் இருப்பதையும், எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அந்த ரயிலில் இருந்த 1,௦௦௦ பயணிகளை வேறு ஒரு ரயிலில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது,

“ஒரு வேலை, அந்த ரயில் தொடர்ந்து பயணித்து இருந்தால், அது தடம் புரண்டு, பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். ரயிலில் இருந்த விரிசல் மற்றும் எண்ணெய் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த சேதம் தவிர்க்கப்பட்டது. இது எதனால் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க மூன்று ஆய்வாளர்களை நேகோயோவிற்கு அனுப்பியுள்ளோம். ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உயிர் சேதம் ஏற்படக்கூடிய இது போன்ற பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் இருக்க சரியான நடவடிக்கைகளை அவர்கள் அனுப்பும் அறிக்கையில் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளோம்” என்று கூறினார்.

பூகம்பங்களின் காரணமாக ஜப்பானிய ஷிங்கின்சென்ஸ்புல்லட் ரயில் தடம் புரண்டுள்ளது. ஆனால், பயணிகள் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க