• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீண்டநாள் காதலி அனுஷ்காவை கரம் பிடித்தார் விராத் கோலி

December 11, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கடந்த 2013ம் ஆண்டு ‛ஷாம்பு’ விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தார். அதன்பின் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். அந்த நட்பு காதலாக மாறியது. பின் காதலில் விழுந்த இருவரும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதற்கேற்ப இலங்கை அணிக்கு எதிரான டி-20, ஒருநாள் தொடரிலிருந்து கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் உள்ள ரிசார்ட்டில் பலத்த பாதுகாப்புக்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இத்திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வரும் 26ம் தேதி மும்பையில் இவர்களது திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க