• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையை ஆய்வு செய்து விளக்கவுரை தந்த மாணவர்களுக்கு பரிசு

December 11, 2017 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மற்றும் அறம் பொதுநல அறக்கட்டளை இணைந்து நடத்திய
மாநகராட்சி பள்ளிகளுக்கான பாலஜனகிரஹா 2017, குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு
பயிற்சி நடத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில்,இப்பயிற்சியில் கலந்துக் கொண்ட மாணவியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அறம் பொதுநல அறக்கட்டளை மாநகராட்சியுடன் இணைந்து தொடர்ந்து இரண்டாவது
ஆண்டாக பாலஜனகிரஹா 2017 என்ற குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி திட்டத்தை நடத்தினர்.இந்த பயற்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநகராட்சி பள்ளிகளில் 8-ஆம் வகுப்பைச் சார்ந்த 150 மாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி திட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு நமது உரிமைகள்,நமது நகரத்தின் கட்டமைப்பு, போக்குவரத்து, அரசாங்கம், நமது அரசியலமைப்பு உரிமைகள்,வளங்கள் பாதுகாத்தல், பேரழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 மணி நேர வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பான 10 மாணவர்கள் தேர்வு
செய்யப்பட்டு அவர்கள் பள்ளிக்கு அருகிலிருக்கும் சாலையை ஆய்வு செய்து, அதில் இருக்கும்
தேவைகள், பிரச்சனைகள், தீர்வுகள் குறித்து ஒரு விளக்கவுரை பதிவு செய்து கணினியில் காட்சி
விளக்க படங்களுடன் விளக்கி காட்டினார்கள்.

மேலும், நடுவர்கள் சில கேள்விகள் கேட்டு அவர்களின் பேசும் திறமை மற்றும் புரிந்துணர்தல் ஆகியவற்றை பரிசோதித்தனர்.இதில் சிறப்பாக விளக்கி காட்டிய எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பள்ளி முதலிடமும், ராமசாமி நகர் பள்ளி இரண்டாம் இடமும், செல்வபுரம் பெண்கள் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது.

இந்த பாலஜனகிரஹா திட்டத்தினால் ஒவ்வொரு குழந்தையையும் நாளைய பங்கேற்கும்
குடிமக்களாக உறுமாற்றம் பெற்று அவர்களின் வாழ்க்கைத் தரதத்தை மேம்படுத்த உறுதுணையாக
அமையும்.சிறுவயதில் இதை அவர்கள் உணர்ந்தால் வருங்கால குடிமக்கள் மிகவும்
பொறுப்புள்ளவர்களாக நாட்டின் மேன்பாட்டிற்கு செயல்படுவார்கள் என்று அறம் பொதுநல
அமைப்பினர் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி கல்வி அலுவலர் உமா,ஃபோர்டு ஆக்சிலரேட்டர் திட்ட இயக்குநர் லட்சுமி, கோவை போஸ்ட் தலைமை எடிட்டர் வித்யா மற்றும் அறம் பொதுநல அறக்கட்டளை அறங்காவலர் லதா சுந்தரம் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க