• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்த இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கைது

December 9, 2017 தண்டோரா குழு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தலையை துண்டித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக பேசிய இந்து முன்னேற்றக் கழகத்தில் தலைவர் கோபிநாத்தை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்து கோவில்களை இடிக்க வேண்டும் எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்துக்களை புண்படுத்தும் நோக்கில் தாம் கருத்து சொல்லவில்லை என்றும், இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று சொல்லை தாம் பயன்படுத்தவில்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்து, இந்து முன்னேற்ற கழகத்தினர் திருப்பூரில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய அந்த அமைப்பின் தலைவர் கோபிநாத், திருமாவளவனின் தலையை துண்டிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாகக் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்து முன்னேற்றக் கழகம் அமைப்பின் தலைவர் கோபிநாத்தை,திருப்பூர் போலீசார் காரமடையில் கைது செய்தனர்.

மேலும் படிக்க