• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில்,பில்லூர் கூட்டுகுடிநீர் திட்ட குழாய்களை பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

December 9, 2017

கோவையில்,பில்லூர் கூட்டுகுடிநீர் திட்ட குழாய்களை பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி 41 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டப்படி பில்லூர் அணையில் இருந்து வரும் நீரை கவுண்டம்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்ல குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,மணியகாரன்பாளையம் சாலை ரவீந்திரநாத் நகர் பகுதியில் இன்று(டிச 9) காலை குடிநீர்வடிகால் வாரியம் சார்பில் சாலையின் ஓரமாக குழாய்கள் அமைக்கும் பணி நடைப்பெற்றது.
இந்த ரவீந்திரநாத் நகர் பகுதியில் சாலையை ஒட்டியபடி சுமார் 48 வீடுகள் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். குழாய்கள் பதிப்பதற்காக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலையின் ஓரத்தை தோண்டினால் தங்கள் வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் இன்று குழாய் பதிக்கும் பணிகளை செய்ய விடாமல் மறியல் செய்தனர்.

இதனையடுத்து,கோவை சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமையில் காவல் துறை அதிகரிக்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர்.இதனைத்தொடர்ந்து குடிநீர்வடிகால் வாரிய அதிகாரி முன்னிலையில் நடைப்பெற்ற பேச்சு வார்த்தையில் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதி அளித்த காரணத்தால் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் படிக்க