• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை – சேகர் ரெட்டி

December 8, 2017 தண்டோரா குழு

தொழிலதிபர் சேகர் ரெட்டி டைரி குறிப்பில் தமிழக துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என அவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டியின் டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று இன்று(டிச 8) செய்தி ஒளிபரப்பியது. அவர்களுக்குக் கிடைத்த அந்தப் பக்கங்களில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சேகர் ரெட்டி,

வருமான வரித்துறை அதிகாரிகள் என்னுடைய வீட்டில் இருந்து எந்த ஒரு டைரியையும் கைப்பற்றவில்லை.நான் யாருக்கும் பணம் எதுவும் கொடுக்கவில்லை, பிறருக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. டைரியில் உள்ள காகிதத்தில் இருப்பது என்னுடையை கையெழுத்து அல்ல கைபற்றியதாக கூறப்படும் டைரியை யார் எழுதினார்கள் என்பது தெரியவில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை 2 முறை மட்டுமே சந்தித்துள்ளேன். இதுமட்டுமின்றி எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என்றுசேகர் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க