• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கும்மிடிப்பூண்டியில் பெண்ணை காரை ஏற்றி கொன்ற 2 பேர் கைது

December 8, 2017 தண்டோரா குழு

கும்மிடிப்பூண்டியில் சீட்டு பணத்தகராறில் பெண்ணை காரை ஏற்றி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராணியம்மாள். இவரது மகன் பழனி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கார் டிரைவர் கந்தன்
ரூ. 2 லட்சம் சீட்டு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. கந்தனிடம் சீட்டு பணத்தை தரும்படி பழனி அடிக்கடி கேட்டு வந்தார்.

இந்நிலையில் கந்தன் சிறுபுழல்பேட்டைக்கு காரில் நேற்று இரவு வந்தார்.அப்போது சீட்டு பணம் பிரச்சனை தொடர்பாக பழனிக்கும், கந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கந்தன், வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பழனியின் தாயார் ராணியம்மாள் மீது காரை ஏற்றினார்.இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து உடனே காரை அங்கேயே நிறுத்தி கந்தன் தப்பி ஓடினார்.இதனைக்கண்ட கிராம மக்கள் கந்தனை விரட்டி பிடித்து தாக்கினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தப்பி ஓடியபோது அதே பகுதியில் உள்ள சிறிய குட்டை ஒன்றில் கந்தன் மயங்கி விழுந்தார்.

இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்

மேலும்,உயிருக்கு போராடிய கந்தனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராணியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் கந்தனுடன் இருந்த அவரது நண்பர்கள் சென்னை கோவூரைச்சேர்ந்த 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க