• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து நடிப்பது ஈஸியாக உள்ளது – ரைசா

December 7, 2017 பி.எம்.முஹம்மது ஆஷிக்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா. இவருக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 7அப் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து ‘தமிழ்நாட்டின் குரல்’ என்ற மாபெரும் குரல் தேர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் , 7அப் மொபைல் ரெக்கார்டிங் ஸ்டியோவில் 24 இடங்களில் குரல் தேர்வு நடைப்பெறவுள்ளது.இதில்,தேர்வு பெறும் 7 அதிர்ஷ்டசாலிகள் சென்னையில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பங்கேற்க வாய்ப்புள்ளது.

கோவையில் டிசம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ள குரல் தேர்வு நிகழ்ச்சியை நடிகை ரைசா இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவரிடம் பேசும்போது ,

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வாழ்க்கை எப்படியுள்ளது ?

மிகவும் நல்ல முறையில் வாழ்க்கை உள்ளது. நானே எதிர்பார்க்காத அளவிற்கு நிறைய ரசிகர்கள் எனக்கு கிடைத்துள்ளனர். மிகவும் பெருமையாக உள்ளது. மாடலிங் துறையில் இந்த அளவிற்கு எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

மாடலிங்கில் இருந்து ஆக்டிங்கிற்கு வந்திருக்கிறீர்கள் எப்படி இருக்கிறது ?

ஆக்டிங் மிகவும் சேலஞ்சிங்கான ஓன்று மாடலிங் எனக்கு எளிமையாக உள்ளது. நடிப்பை கற்றுக்கொள்தற்காக 2 மாதங்களாக ஆக்டிங் கிளாஸ் போய்க்கொண்டிருக்கிறேன்.

ஹரிஷ் கல்யாணனுடன் இணைந்து நடிப்பது எப்படி உள்ளது?

பிக் பாஸ் வீட்டில் ஹரிஷ் கல்யானுடன் நீண்ட நாட்கள் பழகியதால் அவருடன் இணைந்து நடிப்பது மிகவும் ஈஸியாக உள்ளது. இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

பட வாய்ப்புகள் வருகிறாதா ?

நிறைய பட வாய்ப்புக்கள் வருகிறது, நான் கொஞ்சம் வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைத்தால் நடிக்க தயாராகவுள்ளேன்.

கிராமத்து கதாபத்திரங்கள் கிடைத்தால் நடிப்பீர்களா ?

மாடலிங்கில் இருந்து கிராமத்து கதாபாத்திரம் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கும் அதனால் கிராமத்து கதாப்பாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.

மேலும் படிக்க