• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

December 7, 2017 தண்டோரா குழு

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போலி பான் கார்டுகளை ஒழித்து பினாமி சொத்துக்களை தடுக்கும் விதமாக ஆதார்-பான் எண்கள் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக மத்திய அரசு காலக்கெடுவும் நீட்டித்தது.

ஏற்கனவே டிசம்பர் 31-ஆம் தேதி வரை அதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இதனைத் தெரிவித்தார்.

பாப் அப் பிளாக்கர் நீக்கப்பட்ட கணினி அல்லது மொபைல்களில் income tax e filing இணையதளத்திற்குள் சென்று ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் பதிவிட்டால், ஒரு முறை பாஸ்வேர்ட் மூலம் எளிமையாக ஆதார்-பான் எண்களை இணைக்கலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க