• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை தொடர்ந்து நெல்லையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு!

December 6, 2017 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையை தொடர்ந்து நெல்லையில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அண்மையில் நியமிக்கப்பட்டார். பின்னர் அண்மையில் கோவையில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற அவர் தமிழக ஆளுநர் வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அத்துடன் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குப் போய் தூய்மை பணிகளையும் மேற்கொண்டார். எனினும், ஆய்வு பணிகள் தொடரும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில்,இன்று(டிச 6) நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் புரோஹித் பங்கேற்றார்.பின்னர் திடீரென நெல்லை பேருந்து நிலையத்தில் ஆய்வை நடத்தினார்.

அப்போது, பேருந்து நிலையத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றினார்.மேலும் சுகாதாரப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுரை வழங்கினார்.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஆளுநர் கோவையை அடுத்து நெல்லையில் தற்போது ஆய்வு மேற்கொள்ள விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

மேலும் படிக்க