• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாபர் மசூதி இடிப்பிற்கு நியாயம் கேட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

December 6, 2017 தண்டோரா குழு

பாபர் மசூதி இடிப்பிற்கு நியாயம் கேட்டு இன்று(டிச 6) எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பாக கோவை ஆத்துபாலம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று இந்தியாவின் கறுப்பு தினமாக முஸ்லீம் அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கோவை ஆத்துபாலம் பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ யின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில்,

“பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான இன்று முஸ்லீம் அமைப்புகள் சார்பாக மீண்டும் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் 463 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்கு ஆற்றிய அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அப்போதைய காங்கிரஸ் அரசு கட்டிக்கொடுப்பதாக சொன்ன வாக்குறுதியை தற்போது மத்திய அரசிடம் கேட்கவில்லை, நீதிமன்றம் மசூதியை கட்ட உத்திரவிட வேண்டும்.

மேலும் பாபர் மசூதி இடிப்பு இந்தியாவிற்கே தலைகுனிவு என்றும் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் நிலை நாட்ட வேண்டுமென்றால் பாபர் மசூதி கட்டப்பட வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க