• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே நகரில் நடிகர் விஷால் தர்ணா போராட்டம்

December 5, 2017 தண்டோரா குழு

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யபட்டுள்ளார்.

ஆர்.கே நகரில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு விண்ணப்பப் படிவத்தில் உள்ள கையெழுத்தில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் விஷாலின் வேட்பு மனுவை ஏற்க கூடாது என அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நடிகர் விஷாலின் வேட்புமனு காலை பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது.பின்னர், மாலை மீண்டும் விஷாலின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, விஷாலை முன் மொழிந்து கையெழுத்திட்ட 3 பேரில் இருவரின் கையெழுத்து தவறாக இருந்ததால் அவரின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஷால் வேட்பு மனு நிராகரிப்பு குறித்து, தேர்தல் அலுவலர் வேலுச்சாமியுடன் விளக்கம் கேட்டறிந்தார். பின்னர், விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீசார் நடிகர் விஷாலை கைது செய்தனர்.

மேலும் படிக்க