• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் உடல்நலக்குறைவால் காலமானார்

December 4, 2017 தண்டோரா குழு

பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் (79) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் காலமானார்.

கடந்த 1960 – 70 ஆண்டுகளில் இந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார் நடிகர் சசிகபூர். பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திர குடும்பமான கபூர் குடும்பத்தைச் சேர்ந்த சசிகபூர், 1938ல் பிறந்தார்.1940ல் தனது 2வதுவயதில் நடிக்க வந்தார். நடிகராக மட்டுமின்றி பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த சசிகபூர் இதுவரை சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகபூர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சசிகபூர், 3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது, தாதா சாகிப் விருது உள்பட பல விருதுகளை பெற்று உள்ளார்.
சசிகபூருக்கு குணால் கபூர், கரண் கபூர் என இரு மகன்களும், சஞ்சனா கபூர் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி ஜெனிபர் கெண்டால் 1984 ஆம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க