• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை – விஷால்

December 4, 2017 தண்டோரா குழு

எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர்21 ம் தேதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசியல்வாதியாக இல்லாமல் ஆர்கே நகர் மக்களில் ஒருவனாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை.

மக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வாக்கு கேட்கவுள்ளேன்.கட்சி தொடங்கியோ, மற்ற கட்சிகளோடு இணைந்தோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நாங்கள் சொன்னதை செய்து உள்ளோம்.திரைத்துறையினர் யாரும் எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.

மேலும் படிக்க