• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே நகரில் போட்டியிடும் விஷாலுக்கு எதிர்ப்பு – தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம்

December 4, 2017 தண்டோரா குழு

ஆர்.கே நகரில் போட்டியிடும் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் சேரன்,

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதிவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட வேண்டும்.விஷால் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர்கள் சங்கம் பாதிக்கப்படும்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான 8 மாதத்தில் கொடுத்த வேலைகள் எதையும் நிறைவேற்றவில்லை.இயலாமையை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்க பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும். விஷால் வேட்பு மனுவை வாபஸ் பெறவேண்டும் அல்லது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து விஷால் பதவி விலக வலியுறுத்தி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள்உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க