• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி யில் காணாமல் போன மகனை தேடி 1,500 கி.மீ சைக்கிளில் பயணம் செய்த தந்தை!

December 4, 2017 தண்டோரா குழு

உ.பியில் காணாமல் போன மகனை தேடி,சைக்கிளில் சுமார் 1,5௦௦ கிலோமீட்டர் சுற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தின் ஹத்திராஸ் பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ் சந்த்.இவருக்கு கோட்னா என்னும் 11 வயது மகன் உள்ளான். மாற்றுத்திறனாளியான அவர், கடந்த ஜூன் மாதம் 24, பள்ளிக்கு செல்லும் போது, காணாமல் போய்விட்டான். மாலை பள்ளியிலிருந்து மகன் திரும்பி வராததால், கவலை அடைந்த சதீஷ் சந்த், அவனை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவனை எங்கும் காணவில்லை.

இதனையடுத்து,அங்கிருந்த காவல்நிலையத்தில் சதீஷ் சந்த் புகார் அளித்தார்.ஆனால், நாட்கள் சென்றதே தவிர, காவல்நிலையத்திலிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தானே மகனை தேடும் முயற்சியில் இறங்கினார்.

மேலும்,காணாமல் போன மகனின் புகைப்படத்துடன்,ஒவ்வொரு நகரத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து, அங்கிருந்தவர்களிடம் தனது மகனின் புகைப்படத்தை காட்டி, யாராவது அவனை பார்த்தார்களா? என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில், ஆக்ராவில், குழந்தை உரிமைகள் ஆர்வலர் நரேஷ் பராஸ், சதீஷ் சந்தை பார்த்து, அவரது நிலைமையை கேட்டு,இந்த விஷயத்தை உ.பி. டி.ஜி.பி.யின் கவனத்திற்கு நரேஷ் பராஸ் கொண்டு சென்றார்.

மேலும்,காணமல் போன தனது மகன் குறித்த செய்தி, யாராவது மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,சதீஷ் சந்த் இதுவரை பல மாவட்டங்களில் ஏராளமான துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க