• Download mobile app
29 May 2025, ThursdayEdition - 3396
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வனப்பாதுகாவலர் அலுவலத்தை இடமாற்றம் செய்யப்படுவதை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு

December 4, 2017 தண்டோரா குழு

கோவையில் இயங்கி வரும் புலிகள் திட்ட கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுவதை கைவிட வலியுறுத்தி, புலிகள் வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று(டிச 4) மனு அளித்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் புலிகள் திட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம் கடந்த 2012 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் களக்காடு முண்டாந்துறை தவிர்த்து, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய மூன்று புலிகள் காப்பகங்கள் கோவை சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள நிலையில், முறையான காரணமின்றி அவ்வலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்வது அவசியமற்றது என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும்,புலிகள் திட்ட முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் தொடர்ந்து கோவையில் செயல்பட வேண்டுமென வலியுறுத்திய விவசாயிகள்,இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க