• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானத்தில் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு பாலியல் தொல்லை

December 2, 2017 தண்டோரா குழு

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரி ராண்டி சக்கர்பெர்க் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மெக்சிகோவின் மசட்லான் நகருக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸில் பயணம் செய்தார். அந்த பயணத்தின்போது, அவருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து அந்த விமான நிறுவனத்தின் நிர்வாகிக்கு கடிதம் அனுப்பினார்.

இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“விமானத்தின் முதல் வகுப்பில் பயணம் செய்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது. அப்போது, என் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர்,குடிபோதையில் என்னிடம் ஆபாசமாக பேசினார். அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்களில் உடல்களை ஆபாசமாக வர்ணித்தார்.

இது சம்பந்தமாக விமானத்தில் பணிபுரியும் ஊழியரிடம் புகார் அளித்தேன். அந்த நபர் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் வழக்கமாக பயணம் செய்பவர். இச்சம்பவத்தை தனிபட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம், வேண்டுமானால், நீங்கள் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டது நான்?நான் ஏன் வேறு ஒரு இருக்கையில் அமரவேண்டும்? இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம் என்றும்,அந்த நபரின் பயண சலுகைகளை திரும்ப பெற்றுள்ளோம் என்று அந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க