• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எந்தவொரு பேனர்களையும் அகற்ற தேவையில்லை-எஸ்.பி.வேலுமணி

November 30, 2017 தண்டோரா குழு

கோவையில் அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் எந்தவொரு பேனர்களையும் அகற்ற தேவையில்லை என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,

“கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க கூடாது என்பதற்காக திமுகவினர் இதை வைத்து அரசியல் செய்கின்றனர்.தனியார் வாகனம்  ஏற்படுத்திய விபத்து காரணமாகவே  இளைஞர் ரகுபதி உயிரிழந்தார். அதற்கு அலங்கார் வளைவு காரணம் அல்ல. அலங்கார வளைவுகள் அமைப்பது எங்களுக்கு முக்கியமில்லை எனவும் திட்டங்களை பெற வேண்டும் என்பதே எங்களுக்கு முக்கியம்.

மேலும்,எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவாக மட்டுமின்றி கோவை மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்களுக்கு நிதி தொடர்பாகவும் இந்த விழா இருக்கும்.கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்படும் பேனர்களில் எந்தவித நீதிமன்ற உத்தரவும் மீறப்படவில்லை, இருப்பினும் நீதிமன்ற உத்தரவிற்கு முன்பாகவே 14 இடங்களில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் அகற்றபட்டுள்ளது.இந்நிலையில் அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் எந்தவொரு பேனர்களையும் அகற்ற தேவையில்லை.

கன்னியாகுமரியில் மட்டுமின்றி சென்னை, திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்புகளை சரி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது”. இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க