• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அலங்கார வளைவுகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது வரவேற்கதக்கது – மு.க.ஸ்டாலின்

November 30, 2017 தண்டோரா குழு

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவுகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது வரவேற்கதக்கது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி பொறியாளர் ரகு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ரகுவின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,

“அதிமுக கட்சியினரால் வைக்கப்பட்ட அலங்கார வளைவினால், கோவையை சேர்ந்த ரகுபதி என்ற பொறியாளர் உயிரிழந்துள்ளார். மணக்கோலத்தில் பார்க்க வேண்டியவரை, பிணக்கோலத்தில் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சாலைகளின் ஓரங்களில் அலங்கார வளைவுகள் வைக்க கூடாது என்றும், உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களையும் வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்திரவிட்ட போதிலும், அதிமுகவினர் இதை கண்டுகொள்வதில்லை.

திமுகவில், தான் செயல் தலைவராக பொறுப்பேற்றதும், எந்த நிகழ்ச்சிக்கும், பொதுமக்களுக்கு இடையூராக கட் அவுட்டுகள் வைக்க கூடாது என தெரிவித்திருந்தேன்.இதனை திமுகவினர் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் நீதிமன்ற உத்திரவை மீறி அதிமுகவினர் அலங்கார வளைவுகள் வைத்திருந்தனர்.இதுதொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கை அழைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறிவுறுத்தினேன்.

இதனையடுத்து, இந்த வழக்கில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்,கட் அவுட் வைக்க கூடாது என தீர்ப்பு வழங்கி இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பேனர்,கட் அவுட் வைக்கலாம் என்றாலும் பேனர்கள் வைக்க அனுமதியே அளிக்க கூடாது.

மேலும்,பொறியாளர் ரகுபதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, திமுக சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.ரகுபதி இழப்பிற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க