• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் அன்புசெழியன் திரையுலகம் அதிர்ச்சி !

November 30, 2017 தண்டோரா குழு

சினிமா படத்தயாரிப்பாளர் அசாேக்குமார் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் இன்று திடீரென திரும்பப் பெற்றுக்கொண்டார்.

நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த 21-ம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தன் மரணத்திற்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தான் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். இதனால் அன்புசெழியன் மீது திரையுலககினர் பலர் கடும் விமர்சனம் செய்தனர். எனினும் அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தனர்.

இதற்கிடையில், அன்புச்செழியன்மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நடிகர் சசிகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அன்புச்செழியன்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தற்கொலை வழக்கில் அன்புச்செழியன் தலைமறைவானார். அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமல் தனிப்படையினர் திணறி வருகின்றனர்.

எனினும் அன்புச்செழியன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக நீதிபதி ஆதிநாதனிடம் அன்புச்செழியனின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தனிப்படையினர் அன்புச்செழியனை தீவிரமாக தேடிவரும் நிலையில், முன்ஜாமீன் மனு திடீரென வாபஸ் பெற்றிருப்பது திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க