November 29, 2017
தண்டோரா குழு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிட உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ் மீண்டும் போட்டியிடவுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டது.
இந்நிலையில்,இந்த தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அவரது அணியினர் அறிவித்துள்ளனர்.கடந்த முறை தொப்பி சின்னத்தில் தினகரன் ஆர்கே நகரில் களமிறங்கினார். ஆனால், அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.