November 29, 2017
தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளி விடுதிகளில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மாணவர் விடுதி மற்றும் அரசு உதவி பெறும் மாணவர் விடுதிகளில் தேசியகீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை முதன்மை செயலர் சமித் ஷர்மா
“இந்த நடவடிக்கை மாணவர்களிடையே தேசிய வாத உணர்வை உருவாக்கும். காலை 7 மணிக்கு மாணவர்களின் ‘ஜன கன மன’ என்று தொடங்கும் நமது தேசய கீதத்தை பாடுவார்கள்.அந்த சமயத்தில் விடுதி காப்பாளரும் அதில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் 26ம் தேதி, அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு இந்த நாளில் புதிதாக தற்போது பிறபிக்கப்பட்ட உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிட்டத்தட்ட 800 அரசுபள்ளிகளில் உள்ள விடுதிகளில் சுமார் 40,000 மாணவர்கள் கல்விகற்று வருகிறார்கள். ஜெய்ப்பூர் மாநகர கார்போரசன், நாளின் தொடக்கத்திலும் நாளின் முடிவிலும் தேசிய கீதம் பாடும் பழக்கத்தை தொடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.