November 28, 2017
தண்டோரா குழு
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.,க்கள் மேலும் 2 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினர்.
டி.டி.வி.தினகரன்ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து நேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.பிக்கள் திண்டுக்கல் எம்.பி உதயகுமார் மற்றும் வேலூர் எம்.பி செங்குட்டுவன்,ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
டி.டி.வி.தினகரனுக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள், 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்த நிலையில் நேற்று 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று 2 நாடாளுமன்ற முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் டிடிவி திகனரன் ஆதரவு எம்பிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.