November 28, 2017
தண்டோரா குழு
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே தங்களது திருமண அறிவிப்பை இன்று வெளியிட்டனர்.
கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.இந்நிலையில் இவர்களுடைய திருமண அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
மேலும்,இவர்களது திருமண நாள் பற்றிய விவரங்கள் சில மாதத்திற்கு பிறகு அறிவிக்கப்படும். இவர்களுடைய திருமணம் முடிந்த பிறகு,லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் உள்ள நாட்டிங்ஹாம் மாளிகையில் வசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.