• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோமனூரில் ஆசிரியை திட்டியதால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

November 28, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சோமனூரில் தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதால் 12 ம்வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சோமனூர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன்.இவர் கருமத்தாம்பட்டியில் உள்ள சென்னிமலை கவுண்டர் மெட்ரிக் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர் அருள்செல்வனை முடி வெட்டாமல் வந்த காரணத்திற்காக பள்ளியின் வேதியல் துறை ஆசிரியை,சங்கீதா சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியதாக கூறப்படுகின்றது.இதில் மனவேதனையில் இருந்த மாணவன் அருள்செல்வன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவு வேலை முடிந்து அருள்செல்வனின் தந்தை அண்ணாமலையும்,தாயும் வீட்டிற்கு வந்த போது மாணவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.இதனையடுத்து மாணவர் அருள்செல்வனின் உடல் கோவை அரசு மருத்துவமனைகரகு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

மாணவரின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை சங்கீதா மீது நடவடிககை எடுக்க கோரி பெற்றோர்கள் கருமத்தாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை சங்கீதா மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க