November 28, 2017
தண்டோரா குழு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அவைத் தலைவர் மதுசூதனன் விருப்ப மனு அளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அவைத் தலைவர் மதுசூதனன் அக்கட்சியின் தலைமை கழகத்தில் இன்று(நவ 28) அளித்தார்.
ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் புதிய ஆட்சிமன்ற குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.புதிய ஆட்சிமன்ற குழு ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வது என்றும் இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலை தலைமை கழகம் சென்று விருப்ப மனு அளித்தார்.ஏற்கனவே இவர் ஆர்.கே.நகர் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.