November 28, 2017
tamilsamayam.com
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சாதனை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. இதன் 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைப்பெற்றது. இதில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
முதல் இன்னிங்ஸ்:
இலங்கை 205-10
அஸ்வின் 4, இசாந்த், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள்
இந்தியா 610-6 டிக்லெர்
இந்தியாவின் முரளி விஜய் 128, புஜாரா 143, கோலி 213, ரோகித் சர்மா 102 என மொத்தம் 5 சதம் அடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா 6விக்கெட்டுக்கு 610 ரன்கள் எடுத்து டிக்லெர் செய்தது.
2வது இன்னிங்ஸ் :
இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலாக விளையாடிய இலங்கை அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
2வது இன்னிங்ஸில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா, ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இலங்கை அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.