அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் ஹைதராபாத் நகரில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று ஹைதராபாத் வந்துள்ளார்.
ஹைதராபாத்திலுள்ள ஹைதராபாத் சர்வதேச மாநாடு சங்கத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இவாங்கா டிரம்ப் அம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.அவருக்கு ஹைதராபாத் நவாப்களால் கட்டப்பட்ட பலக்னுமா பேலஸில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவாங்கா டிரம்ப், இத்தாலிய மற்றும் டூடர் கட்டிடக்கலையின் கலவையாக விளங்கும் அந்த அரண்மனையை சுற்றி பார்ப்பார். இவாங்கா டிரம்ப் ஹைதராபாத்தில் சுமார் 24 மணிநேரம் இருக்க நேர்வதால், அவர் ஹைதராபாத் நகரத்தை சுற்றியும், பாலாக்னுமா அரண்மனையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சார்மினாரை பார்க்க செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்