November 27, 2017
தண்டோரா குழு
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் கூடா நட்பு கேடாய் முடியுமென சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், அதிமுக தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடாது, அத்தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆதரவு இல்லை. இந்நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழக அரசு மத்திய அரசிற்கு பணிந்து, மாநில உரிமைகளை விட்டு கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால், கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.