November 27, 2017
தண்டோரா குழு
கோவையில் சில்லறை தகராறில் கொதிக்கும் எண்ணெயை வாடிக்கையாளர்கள் மீது பானிபூரி கடைக்காரர் ஊற்றி உள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் மதியழகன் நகரை சேர்ந்தவகள் தீபக், திலீப், டேவிட், சேவியர். இவர்கள் நால்வரும் நேற்று இரவு அதே பகுதியில் சாலையோரத்தில் உள்ள பானி பூரி கடைக்கு சென்றுள்ளனர். அங்கு பானி பூரி சாப்பிட்டு பணம் கொடுத்துள்ளனர். அப்போது கடைக்காரருக்கும் அவர்களுக்கு சில்லறை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், கடும்கோபமடைந்த தள்ளுவண்டி கடைக்கார் கணேசன் இளைஞர்கள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் இளைஞர்கள் அலறியுள்ளனர். இதையடுத்து, அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு ஹோட்டலில் இதேபோன்று வாடிக்கையாளர்கள் மீது கொதிக்கும் எண்ணையை கொட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.