மேற்குவங்கத்தில் ரோட்டில் நின்ற யானையுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பாய்க் கிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இந்த சுற்றுலாத் தளங்களை பார்ப்பதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், அப்பகுதியில் சாதிக் ரஹ்மான் என்பவர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக யானை ஓன்று நடந்து கொண்டிருந்தது. யானை கண்ட சாதிக் காரில் இருந்து இறங்கி அதன் முன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அவரை கண்ட யானை வேகமாக ஓடிவந்து ஆக்ரோசத்துடன் அவரது உடைத்து, இதனால் அதிர்ச்சியடைந்த சாதிக் தப்பி ஓட முயன்ற்றுள்ளார். அப்போது யானை அவரை காலால் மிதித்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் செல்போன் மூலம் படம் படித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்