November 24, 2017
தண்டோரா குழு
அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த +1 படிக்கும் மாணவிகள் தீபா, மனிஷா, ரேவதி, சங்கரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து ஒரு மாணவியின் உடலை மீட்ட போலீசார் மற்ற மாணவிகளின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கிணற்றில் தவறி விழுந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.