• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

November 24, 2017

கோவை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிசந்திரன் தலமையில் நடை பெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.அப்போது துறைவாரியாக அதிகாரிகளை அழைத்த போது 50 சதவிகித்திற்கும் மேல் அதிகாரிகள் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வரவில்லை.

இதனால் ஆதங்கப்பட்ட விவசாயிகள் வருவாய்துறை அதிகாரியை முற்றுகையிட்டு தங்களது வருத்தங்களை கொட்டி தீர்த்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் இதே நிலை என்பதால் விவசாயிகளின் குறைகேட்க அதிகாரிகள் வருவது இல்லை எனவும், மோசமான இந்த நிலைக்கு தீர்வுகாண வராத அதிகாரிகளுக்கு மெமோ வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

நடக்கும் நிகழ்வை சமாளிக்க முடியாமல் வருவாய்த்துறை அதிகாரி துரை ரவிசந்திரன் விவசாயிகளிடம் நிச்சயமாக தீர்வு காணப்படும் என அழுத்தமாக கூறினார்.

இதனயடுத்து விவசாயிகள் எழுந்து நின்று கோரிக்கைகளை தமிழில் அனுப்பினால் அதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து பதில்கள் ஆங்கிலத்தில் வருவதாக குற்றம் சாட்டினர். யாரிடம் இந்த குறையினை சொல்வது என தங்களது ஆதங்கத்தைச்சொன்னபோது பதில் தர முடியாமல் அதிகாரிகள் திணறி நின்றனர்.

மேலும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி கலந்துகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதால் வனத்தை ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.

ஒரு சில விவசாய அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமே அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக கூறி விவசாய அமைப்பினர் இடையே கடும் வாக்கு வாதம் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வந்த காவல்துறையினர் விவசாயிகளை சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

விவசாயிகளிடம் ஒற்றுமை இருந்தால் மட்டுமே அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதிகாரிகளின் மெத்தனப்போக்கு விவசாயிகளைத்தான் பாதிக்கும் எனவே மாவட்ட நிர்வாகம் உணர்ந்து செயல்பட்டால், குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர முடியும்.

மேலும் படிக்க