November 23, 2017
தண்டோரா குழு
சீனாவின் இ-ஷாப்பிங் வலைத்தளம் மூலம் 747 போயிங் ரக விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2௦11ம் ஆண்டு, ஜேட் கார்கோ இன்டர்நேஷனல் நிறுவனம் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு சரக்குகளை எடுத்து செல்லும் சேவையை தொடங்கியது.இதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு சுமார் 534 மில்லியன் சொத்து சேர்ந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தால் சுமார் 707 மில்லியன் டாலர் கடன் ஏற்பட்டு திவால்நிலை ஆளானது.
இதனையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டது.கடந்த 2௦13ம் ஆண்டு முதல், அந்த நிறுவனம் இயங்கவில்லை.இந்நிலையில் திவால் ஆவதை கையாளும் நீதிமன்றம் பல ஆண்டுகளாக இவற்றை விற்பதற்கு முயன்று வந்தது.இவற்றை ஏலமிடும் முந்தைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே,அவற்றை இணையதளம் மூலம் விற்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு, அந்த இரண்டு விமானங்களை சீனாவின் மின் வணிக நிறுவனமான அலிபாவிற்கு சொந்தமான ‘தாவ்போ’ இ-ஷாப்பிங் இணையதளம் மூலம்,சீனாவின் “Chinese SF Carriers”அந்த 2 விமானங்களை 320 மில்லியன் யுவான் 48மில்லியன்டாலருக்கு,2 போயிங் 747 ரக விமானங்களை வாங்கியுள்ளது.