• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாராஷ்டிராவுக்கு பதிலாக மத்தியபிரதேஷம் சென்ற ரயில்

November 23, 2017

புதுதில்லியிலிருந்து மகாராஷ்டிராவுக்கு செல்லவேண்டிய ரயில் தவறுதலாக மத்திய பிரதேஷ் மாநிலத்திற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 15௦௦ விவசாயிகள் கடந்த நவம்பர் 2௦ம் தேதி புதுதில்லியில் நடந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். இந்த போராட்டத்தில் இந்தியாவின் மற்ற மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துக்கொண்டனர்.

இப்போரட்டம் முடிந்த பிறகு நவ 20 இரவு ‘ஸ்வாபிமானி எக்ஸ்பிரஸ்’ மூலம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு திரும்பி வந்தகொண்டிருந்தனர். ஆனால், அந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்வதற்கு பதிலாக மத்திய பிரதேஷ் மாநிலத்தின் பன்மூர் ரயில் நிலையம் சென்றடைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ரயில் தடங்கள் மீது அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதனையடுத்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து மத்திய பிரதேஷ் மாநிலத்தின் பன்மூர் ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்,இந்த தவறு ஆக்ரா கட்டுப்பாட்டு அறை ஊழியரின் கவனகுறைவால் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க