• Download mobile app
03 Jun 2024, MondayEdition - 3036
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 22, 2017

கோவையில் ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள ரேசன் கடைகள் முன்பாக திமுக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சியின் 93 வது வார்டு பகுதியான குனியமுத்தூர் பகுதியிலுள்ள ரேசன் கடை முன்பாக திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் சித்தாபுதூர் பகுதியிலும் மற்ற பிற பகுதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க