November 22, 2017
தண்டோரா குழு
கடந்த சில மாதங்களாக தீவிரமான அரசியல் கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் கூறிவருகிறார். அரசியல் கட்சி தொடங்குவதிலும் மும்முரமாக இருக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இது மட்டுமின்றி ஆளும் கட்சியின் ஊழலையும், மத்திய அரசின் முடிவுகளையும் கடுமையாக எதிர்த்து எழுதி வருகிறார்.
இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் முகப்பு படமாக பாரதி கெட் அப்பில் தன்னை வரைந்து வைத்துள்ளார். அந்தப் படம் தற்சமயம் சமூக வலதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.