• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பு, திரிஷா மற்றும் வடிவேலுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய தயாரிப்பாளர் சங்கம்

November 17, 2017 தண்டோரா குழு

‘அண்ணாதுரை’ இசை வெளியீட்டு விழாவில் முன்னணி நடிகர் மற்றும் காமெடி ஜாம்பவான் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் வந்திருப்பதாகவும், விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து அந்த நபர்கள் சிம்பு, திரிஷா மற்றும் வடிவேலு என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” படத்தின் நஷ்டத்தைத் தொடர்ந்து, சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் தெரிவித்திருக்கிறார். இதற்காக சிம்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதைபோல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மனக்கசப்பினால் வடிவேலு ‘இம்சை அரசன்-2’ படப்பிடிப்பிற்கு வராமல் உள்ளார். இவர் மீது ஷங்கர் புகார் அளித்ததை அடுத்து வடிவேலுவிற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாம்.

மேலும், ‘சாமி 2’ படத்திலிருந்து த்ரிஷா விலகலைத் தொடர்ந்து, அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அவருடைய விலகலைத் தொடர்ந்து, படத்தின் கதையைவே மாற்றக் கூடிய சூழலுக்கு படக்குழு தள்ளப்பட்டு இருக்கிறது. இதன் மீது தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க