• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘கொலவெறி’க்காக அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்!

November 16, 2017 தண்டோரா குழு

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘3’. இப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையிலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது. ‘கொலவெறி’ அளவுக்கு இந்தியத் திரையுலகில் இதுவரை எந்ததொரு பாடலும் வெற்றியடையவில்லை என்றே சொல்லலாம்.

இன்று(நவம்பர் 16) இதே தினத்தில் 6 வருடங்களுக்கு முன்பு ‘கொலவெறி’ பாடல் வெளியானது. இந்நிலையில் தனுஷ் அனிருத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

கொலவெறி பாடல் வெளியிடப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன.அப்படியென்றால் அனிருத் இசையமைப்பளாலராகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. வாழ்த்துகள் அனிருத். இன்னும் நிறைய வெற்றிகள் கிட்டும். ஆனாலும், அந்தப் பாடல் நமக்கு அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தனுஷிற்கு அனிருத்திற்கு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்து வருகின்றனர். ஆனால், நீண்ட நாட்கள் கழித்து தனுஷ், அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதால் மீண்டும் இருவரும் இணைந்து பணிபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க