• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி.ஆர்., பேச்சால் நான் மிகவும் காயப்பட்டேன்

November 4, 2017 தண்டோரா குழு

கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் விழித்திரு.
மீரா கதிரவன் இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய நடிகர் டி.ராஜேந்தர், தன்ஷிகா என் பெயரை குறிப்பிட்டா நான் வாழப்போகிறேன்’ என்று ‌நடிகை தன்ஷிகாவை மிக மோசமாக திட்டினார்.

இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழுது விட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை தன்ஷிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

டி.ஆர்., பேச்சால் நான் மிகவும் காயப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வர ஒருவாரமானது. ஒருநாள் முழுதும் என் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். இந்த பிரச்சனைக்கு மேலும் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை. ஆனால் என் போனை ஆன் செய்த பின் எனக்கு ஆதரவாக பலர் மெசேஜ் செய்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். என்றார்.

மேலும் படிக்க