• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?

October 28, 2017 tamilsamayam.com

திரைஉலக காதல் ஜோடியான நயன்தாரா- விக்னேஷ் சிவன் விரைவில் ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது, இவருக்கும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.

இதன்பின் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெளிநாட்டில் பிரமாண்டமாக கொண்டாடினார். அவருக்கு சொகுசு காரை பரிசளித்தார். இதையடுத்து ஜோடியாக வளம்வரும் இவர்கள், தங்களது காதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இருவரும் ரகசியமாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தவிர, இதை உறுதி செய்யும் விதமாக சென்னையில் பங்களா ஒன்றை இந்த ஜோடி வாங்கியுள்ளதாக தெரிகிறது. திருமணத்துக்கு பின் அவர்கள் அந்த பங்களாவில் குடியேற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த தகவலை இரு தரப்பில் இருந்தும் இன்னும் உறுதி செய்யவில்லை.

Recommended By Colombia

மேலும் படிக்க