• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சலுக்கு ஆதரவாக குரல்கொடுத்த பாடகி சின்மயி.!

October 24, 2017 tamil.samayam.com

மெர்சல் படத்திற்கு எதிரான, ஹெச். ராஜாவின் டுவிட்டுக்கு எதிராக, பாடகி சின்மயி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு எதிராக கேள்விகளை எழுப்பி உள்ளார்.

கடந்த தீபாவளி அன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரிக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மெர்சல் அரசியல் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச். ராஜா “சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதுபோதாதென்று, விஜய் ஒரு கிறிஸ்தவர் என நிரூபிக்கும் வகையில், விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பத்திரிகை நிறுவனத்திற்கு விஜய் எழுதிய கடிதம் ஆகிய இரண்டையும் பதிவிட்டு ‘உண்மை கசப்பானது’ என்று ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டார்.

ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க